திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா
இலங்கை
திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்து அருள்பெற்றனர். ஆலய வீதிகளில் நடைபெற்ற தேர்ப்பவனி பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் உற்சாகமாக முன்னேறியது.
மேலும், ஆலய நிர்வாகத்தினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு நடைபெற்ற தேர்த்திருவிழா , பக்தர்களுக்கு ஆன்மீக மகிழ்ச்சியையும் இறை அருளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















