அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை - ஜேடி வேன்ஸ் திடீர் வெளியேற்றம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முற்றுப்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனச் செய்தியறிக்கை வெளியிட்டுவிட்டு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.
லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா எவ்வித உறுதிமொழியையும் வழங்க முன்வராதது.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்தது. பெய்ரூட் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் உயிரிழப்புகளுக்கு மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளன.
இது சர்வதேச அளவில் போர்நிறுத்த மீறலாகக் கருதப்பட்டு கண்டிக்கப்படுகிறது. தகவல் தொடர்பு வழிகள் தொடர்ந்து திறந்திருக்க வேண்டும் என்றும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து டொனால்ட் டிரம்ப் எடுக்கப்போகும் முடிவுகளிலேயே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.





















