• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு ரயில் சேவைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த சேவை மீண்டும் தொடங்கப்படுவதால், கொழும்புக்கும் வட மாகாணத்திற்கும் இடையே வழக்கமான ரயில் இணைப்பு மீண்டும் நிலைநாட்டப்படும் என்றும் ரயில்வே திணைக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், தினமும் காலை 5:15 மணிக்கு கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கும், பிற்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸைக்கும் இயக்கப்படும் நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு வசதிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply