• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேதன்யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை - ஈரான் சூளுரை


ஈரான் குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம் என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது.

மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோ என சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.

அந்த வீடியோ​வில் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார்.

அதில் ஈரானின் புதிய உயர் தலை​வர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்​லப்​போவ​தாக மறை​முக​மாக அச்​சுறுத்​தி​யதுடன், இஸ்​ரேலிய இராணுவத்​தின் நடவடிக்கைகளையும் நியாயப்​படுத்​தி​னார்.

இதனிடையே அமெரிக்க அரசி​யல் வர்​ணனை​யாளர் கேண்​டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்​கே?’ (நெதன்​யாகு​வின் செல்​லப்​பெயர்) எனக் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

இதனிடையே, பெஞ்​சமின் நெதன்​யாகு இறந்​து​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களை அவரது அலு​வல​கம் மறுத்​துள்​ளதுடன், அவர் நலமாக உள்​ளார் என்​றும் தெரி​வித்​துள்​ள அதேவேளை நேதன்யாகு காப்பி அருந்தும் புகைபடமும் வெளியாகி இருந்தது.
 

Leave a Reply