• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

இலங்கை

மட்டக்களப்பு மாவட்;டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரியாவெளி, கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமான முறையில் இந்த கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பரல்களில் இருந்த 8 இலட்சம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.

முற்றுகையின்போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
 

Leave a Reply