சூர்யா எடுத்த முக்கிய முடிவு - வெற்றிமாறனின் வாடிவாசல் பற்றி வந்த சூப்பர் அப்டேட்
சினிமா
நடிகர் சூர்யா சமீப காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் நடித்து முடித்திருக்கும் கருப்பு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு விஸ்வநாத் & சன்ஸ் என டைட்டில் வைத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்து வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறதாம்.
வெற்றிமாறன் அந்த படத்திற்காக 130 நாள் கால்ஷீட் சூர்யாவிடம் கேட்டிருக்கிறாராம். ஆனால் தொடர்ந்து தேதிகள் கொடுக்காமல், மாதத்திற்கு 10 நாள் கால்ஷீட் வாடிவாசலுக்கு தருவதாக சூர்யா தெரிவித்து இருக்கிறாராம்.
அதனால் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்குவது பற்றிய அப்டேட் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






















