• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

இலங்கை

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டமானது நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (3) இடம்பெறவுள்ளது.

தற்சமயம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் நமது நாட்டு மக்களில் நலன்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடி, இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டே இக்கூட்டம் இடம்பெறலுள்ளது.
 

Leave a Reply