• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 20,000 பவர் பாங்க் பயனர்களுக்கான எச்சரிக்கை

கனடா

கனடாவில் சுமார் 20,000 பவர் பாங்குகள் தீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படுவதாக கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

வான்கூவர் தலைமையிடமாகக் கொண்ட LOGiiX நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட தனது பிஸ்டன் பவர் 5000 மெக் பவர் பாங்க் Piston Power 5000 Mag Power Bank சாதனங்களை திரும்பப் பெறுகிறது.

அறிவிப்பின்படி, “சில பவர் பாங்குகள் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யும் போது அல்லது தானே சார்ஜ் ஆகும் போது அதிக வெப்பமடைந்து தீ அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 9ஆம் திகதி நிலவரப்படி, கனடாவில் நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

2022 ஜனவரி முதல் 2025 ஜூலை வரை விற்பனை செய்யப்பட்ட பின்வரும் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன:

• LGX-13302 – கருப்பு

• LGX-13303 – வெள்ளை

• LGX-13304 – நேவி / மிட்நைட் ப்ளூ

• LGX-13839 – லாவெண்டர்

• LGX-13840 – பிளஷ் மாடல் எண், பொருளின் பேக்கேஜ் கீழ்பகுதியில் பார்கோடு மேல் பகுதியில் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் உடனடியாக இந்தப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தி, மாற்று பவர் பாங்கைப் பெற LOGiiX நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், லித்தியம்-அயன் பேட்டரிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் அகற்றவும் தொடர்புடைய நகராட்சி நிர்வாகத்திடம் ஆலோசனை பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply