அமெரிக்கா நாடாளுமன்றத்துள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர்
அமெரிக்காவின், வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்துள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர் துப்பாக்கியுடன் நுழைய முற்படுவதை பார்த்த பொலிஸார் அவரை சுற்றி வளைத்து ஆயுதத்தை கீழே போடும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, இளைஞர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்ட நிலையில் கைதானதாக கூறப்படுகின்றது.
கைதான இளைஞரிடமிருந்து வெடி மருந்துகளையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பராளுமன்ற வளாகம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் பொலிஸார் சோதனை செய்ததில் எரிவாயு, முகமூடி, ஹெல்மட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த இளைஞர் எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.






















