• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - கமல்ஹாசன்

சினிமா

கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார். 
 

Leave a Reply