• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜியோ இணைந்த சர்வதேச கூட்டமைப்பு - AI மற்றும் கிளவுட் சேவையில் புதிய அத்தியாயம்

தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ‘Trusted Tech Alliance’ எனும் புதிய சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பில் Microsoft, Google Cloud, Ericsson, Nokia மற்றும் Anthropic உள்ளிட்ட உலகின் முன்னணி 15 நிறுவனங்கள் இணைந்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த Jio Platforms நிறுவனமும் இதில் உறுப்பினராக இணைந்துள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஐந்து அடிப்படை விதிகளைப் பின்பற்ற கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

கிளவுட் சேவைகள் முதல் மென்பொருள் தயாரிப்புகள் வரை அனைத்திலும் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கிரண் தாமஸ் தெரிவிக்கையில், உலகளாவிய எண்ம வளர்ச்சி அனைவரையும் சென்றடைய பாதுகாப்பான மற்றும் நம்பகமான தொழில்நுட்பம் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறை இணைய வசதி மற்றும் AI தொழில்நுட்பங்களில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஜியோ பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply