• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் தீ விபத்து - 4 பேர் காயம்

கனடா

கனடாவின் எட்மோன்டன் நகரின் மத்திய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3.00 மணியளவில் 110 அவென்யூ மற்றும் 83 ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகிலுள்ள மூன்று மாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காயமடைந்த நால்வரின் உடல்நிலை குறித்து விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 

Leave a Reply