8 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்..
சினிமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே 64 படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது.
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மங்காத்தா. வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என காட்டிய படம் இது. அஜித்தின் வெறித்தனமான நடிப்பு, வெங்கட் பிரபுவின் மாஸான இயக்கம், யுவனின் மிரட்டலான இசை என படம் வேற லெவலில் இருக்கும்.
2011ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற இப்படத்தை மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்தனர். ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் மங்காத்தா ரீ ரிலீஸ், ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 20.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.






















