முதல்வன் சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி
சினிமா
தமிழ் சினிமாவில் வில்லன் ரோலுக்கு மிகவும் பேர் போனவர் நடிகர் ரகுவரன். அவருக்கு நேற்று பிறந்த நாள். அவர் சினிமாவில் வருவதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு டெம்ப்ளேட் இருந்தது. அந்த டெம்ப்ளேட்டை முற்றிலும் மாற்றி அமைத்தவர் ரகுவரன். ஸ்டைலிஷாக, கோர்ட் அணிந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வில்லனா இப்படித்தான் இருக்கணும் என காட்டியவர் ரகுவரன்.
அவருடைய படங்களை பார்க்கும் பொழுது ஒவ்வொரு கேரக்டரும் அதாவது அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கேரக்டருமே பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும். அவருடைய சில வசனங்கள் இன்று வரை தனித்துவம் மிக்கதாகவே பார்க்கப்படுகிறது. அதை எடுத்துக் கூட பல மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுகள் ரகுவரன் மாதிரி செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு படத்திற்கு ரகுவரன் தயாராகும் விதத்தைப் பற்றி ரோகினி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
அந்த கதாபாத்திரமாகவே வீட்டில் இருப்பார். சில நேரங்களில் அவரை பார்ப்பதற்கே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பிரிபேர் செய்யும் விதம் மிகவும் பிரமிப்பாக இருக்கும் என ரோகிணி பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்திய ஒரு நேர்காணலில் ரோகினி ரகுவரன் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு இன்டர்நேஷனல் படம் எடுக்க வேண்டும் என ரகுவரன் நினைத்தாராம். அவர்தான் ஸ்கிரிப்ட் எழுதியும் வைத்திருந்தாராம். ஒரு இந்தியன் நடிகர் ஒரு பிரெஞ்சு நடிகை இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது என்னென்ன மாதிரியான விஷயங்களை பேசி இருப்பார்கள். என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்பது பற்றியான கதை, ஆனால் அது நடக்கவே இல்லை. அது ரகுவரனின் நிறைவேறாத ஆசையாக போய்விட்டது என்று ரோகிணி கூறியிருந்தார்.
மேலும் எப்பொழுதுமே ரகுவரன் ஷூட்டிங்குக்கு சரியான நேரத்திற்கு போக மாட்டார். அது திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் முதல்வன் படத்திற்கு மட்டும் அவர் சரியான நேரத்தில் போய் ஆஜராகி விடுவார், அது ஆரம்பத்தில் எனக்கு ஏன்னு புரியவில்லை. அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது, முதல்வன் படத்தில் அவருக்கு உண்டான வசனங்கள் நிறைய இருக்கும்.
டயலாக் அதிகமாக பேச வேண்டியது இருக்கும். அது போக லொகேஷனில் நிறைய மாற்றங்கள் அந்த படத்தில் நடந்திருக்கிறது. அதற்காகவே அவர் சீக்கிரமாக போய்விடுவார். மற்ற படங்களை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் ஆக்சன் மூலமாகவே ஸ்கோர் செய்திருப்பார். அதற்காக வீட்டிலேயே பாதி பிரேபரேஷனை முடித்து விடுவார். ஆனால் முதல்வன் படத்தில் டயலாக் அதிகமாக இருந்ததினால் தான் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு போனார் என ரோகிணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேன்மொழி























