• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் ஆளும் கட்சிக்குத் தாவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 

கனடா

கனடாவில் அண்மைய மாதங்களாவே எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில், கனடாவின் என்.டி.பி (NDP) கட்சியைச் சேர்ந்த நுனாவுட் நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லவுட், பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சியில் இணைந்துள்ளார்.

இதன் மூலம் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை நெருங்கியுள்ளது. லோரி இட்லவுட்டின் வருகையோடு லிபரல் கட்சியின் பலம் 170 ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 2 இடங்களே தேவை. இட்லவுட்டின் முடிவால் தாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக என்.டி.பி இடைக்காலத் தலைவர் டான் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆணையை மீறி கட்சி மாறுபவர்கள் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்து லிபரல் கட்சிக்கு மாறிய நான்காவது நாடாளுமன்ற உறுப்பினுர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மூவர் கட்சி மாறியிருந்தனர்.

பிரதமர் கார்னி, ஜனநாயக வழியில் இல்லாமல் பெரும்பான்மையை பெற முயற்சிப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் குற்றம் சுமத்தியுள்ளார். 


 

Leave a Reply