சாண்ட்விச் , இறைச்சி, பால் பொருட்களுடன் பிரிட்டன் செல்லத் தடை
இலங்கை
ஐக்கிய இராச்சியம், ஏப்ரல் 12 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பயணிகள் மாடு, ஆடு, பன்றி இறைச்சி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை பிரிட்டன் நாட்டிற்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தத் தடை சாண்ட்விச்சுகள், சீஸ், உலர்ந்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்கள், பக்கேஜ் செய்யப்பட்டவையாகவோ அல்லது டியூட்டி பிறியில் (duty free) வாங்கப்பட்டவையாக இருந்தாலும் கூட பிரிட்டன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எந்த வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தினாலும் விதிகளை மீறினால் 5 000 பவுண்டு (சுமார் 5 900 யூரோக்கள்) வரை அபராதம் விதிக்கப்படும்.
நீங்கள் விரைவில் ஐக்கிய இராச்சியம் செல்லத் திட்டமிட்டிருந்தால், பயணச்சீட்டு பெற்ற நிறுவனத்திடமிருந்து ஒரு மின்னஞ்சலை பெற்றிருக்கலாம்.
குழந்தைகளுக்கான பால், மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்கள், சாக்லேட், இனிப்புகள், பான், கேக் மற்றும் பாஸ்தா போன்றவவை வரையறுக்கப்பட்ட அளவுகளில் விதிவிலக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள், ஐரோப்பாவில் மீண்டும் தோன்றியுள்ள la fièvre aphteuse நோயின் பரவலைத் தடுக்க பிரிட்டன் அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவில் கால்நடைகளுக்கு இடையில் பரவும் நோயாகும்.
2011க்கு பின்னர் ஐரோப்பாவில் இந்த நோய் காணப்படாத நிலையில், 2025 ஜனவரியில் ஜெர்மனியில் ஒரு தொற்று கண்டறியப்பட்டது.
அதேவேளை முதிர்ந்த மிருகங்களில் லேசானதாக இருந்தாலும், இளம் மிருகங்களில் மரணத்திற்கும் காரணமாகலாம் என பிரான்ஸ் விவசாய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.






















