ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்..
சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைத்த ரஜினிகாந்த். 50 ஆண்டுகளை சினிமாவில் கடந்து தனக்கென்று தனி வரலாறை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.






















