• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உன்போல் யாரும் இல்லையே... ஈரேழு உலகம் தேடியுமே - ரஜினிக்கு சிறப்பு பாடல் வெளியிட்டு கமல் நிறுவனம் வாழ்த்து

சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

"உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 
 

Leave a Reply