• Welcome to TamilsGuide
செய்திகள் 1

LIK படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம்... 

சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 'LIK' படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 19-ந்தேதி ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் படம் வெளியாகுகிறது. இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து உள்ளதால் 'LIK' வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இதனால் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'LIK' படம் இந்தாண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியிட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது பிரதீப் மற்றும் விக்னேஷ் சிவன் ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 

Leave a Reply