• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டாக்ஸிக் படத்தின்... புதிய போஸ்டரை வெளியிட்ட யாஷ்

சினிமா

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 19-ம் தேதி திட்டமிட்டப்படி டாக்ஸிக் வெளியாகும் என புதிய போஸ்டருடன் யஷ் அறிவித்துள்ளார்.

பாத் டப்பில் முதுகில் டாட்டூக்களுடன் ராயல் லுக்கில் யஷ் இருக்கும் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி இன்னும் 100 நாட்களில் டாக்ஸிக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply