• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதுச்சேரியில் இன்று த.வெ.க பொதுக்கூட்டம் - விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

சினிமா

கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று (09.12.2025) செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கியூ. ஆா் குறியீடு(Quick Response Code) இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.  

கூட்டத்தில் பங்கேற்பவர்களின் குடிநீர் தேவைக்காக தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகள் 20 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விஜய் காரில் புறப்படுகிறார்

அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறார். அங்கு விஜய் தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார். 

விஜய் பேச்சை கேட்க வரும் தொண்டர்கள் ‘பாஸ்’ வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்தநிலையில் த.வெ.க. கட்சி சார்பில் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

பொதுக்கூட்டத்தின் போது அந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 11 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் பகுதியில், பாதுகாப்பு கருதி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மத்தியாஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.
 

Leave a Reply