• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு

இலங்கை

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்களை அறிவித்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் இதுவரை 30,470க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகளில் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபா நிதிக்கு பங்களித்துள்ளது.

33 நாடுகளிலிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் அடங்கும். 

செவ்வாய்க்கிழமை (02) நிலவரப்படி, சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீள்கட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக 19,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நிதியை வைப்பீடு செய்துள்ளனர்.

பேரிடருக்குப் பிந்தைய நாட்டின் மீள்கட்டமைப்பினை ஆதரிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள் திரண்டு வருவதால், பங்களிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
 

Leave a Reply