• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐஸ் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை

 ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2013 ஆம் ஆண்டுவரை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் 62 வயது நபரொருவருக்கே மெல்பேர்ன் நீதிமன்றத்தால் இன்று இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் பற்றிய விசாரணைவேட்டைக்காக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் 2012 இல் விசாரணைக்குழுவை அமைத்திருந்தனர்.

நிறுவனமொன்றின் ஊடாக மேற்படி நபர் ஆஸ்திரேலியாவுக்குள் பெருமளவு ஐஸ் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே அவருக்கு இன்று (4) சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
 

Leave a Reply