நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு
இலங்கை
காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது.
கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.
மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























