• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹூ ங்கம தம்பதியர் கொலை – நால்வர் கைது

இலங்கை

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை(07) ஆணொருவரும் பெண்ணொருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 12 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ன வாடிகல மஹாத்தயா ஆரா பகுதியில் இன்று அதிகாலை ஆணொருவரும் பெண்ணொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த வீட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அடையாளந்தெரியாதவகையில் முகமூடி அணிந்த நபர்கள் சிலர் குறித்த இருவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று(07) இடம்பெறவுள்ளதுடன் ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply