பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா
இலங்கை
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்து ஒரு மணி நேரமாக கலந்துரையாடிய பின்னர் எலிசே அரண்மனை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
பிரான்ஸை உலுக்கிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து ஃபிராங்கோயிஸ் பெய்ரூவின் முன்னைய அரசாங்கம் சரிந்ததை அடுத்து லெகொர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட 26 நாட்களுக்குள் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய சட்டமன்றத்தில் உள்ள பல கட்சிகள் லெகொர்னுவின் அமைச்சரவையின் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் லெகொர்னுவின் அமைச்சரவை பெய்ரூவின் அமைச்சரவையிலிருந்து பெரும்பாலும் மாறாமல் இருந்ததாகவும் அவ் அமைச்சரவையை வாக்களிப்பதன் மூலம் நிராகரிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






















