பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்
இலங்கை
பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் இதற்கு முன்பு இதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வீதியை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே பசறை, ஹெலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப பசறை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















