• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம் வேர்தேடி பயணிப்போம் - இட்லி கடை படம் பார்த்து பாராட்டிய சீமான்

சினிமா

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இட்லிக்கடை திரைப்படத்தை பாராட்டி பேசிய சீமான், "வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ், இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டுள்ளார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்" என்று தெரிவித்தார்.
 

Leave a Reply