காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் -பிரதமர் ஹரினி அமரசூரிய
இலங்கை
புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் கீழ், காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து பிரதமர் ஹரணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளதாவது ” புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் கீழ் காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் கிராமப்புற அபிவிருத்தி, காலநிலை சார்ந்த மதிநுட்பம் மிக்க விவசாயம், சுற்றுச்சூழல் மீளமைப்பு, அனர்த்த முன்னேற்பாடு மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய காலநிலை தாங்குதிறனுக்கு ஒரு முன் மாதிரியாகச் செயற்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளது.























