• Welcome to TamilsGuide
செய்திகள் 1

IMF மூலம் மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் -எதிர்க்கட்சி தலைவர் குற்றச் சாட்டு

இலங்கை

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளின் ஊடாக நாட்டு மக்கள் அதிகளவான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணம் ஒன்றை பெற்றுக கொடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியம் இணப்பாடு ஒன்றிக்கு முன்வரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” IMF  செயல்முறை ஊடாக நாட்டு மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே மக்களுக்கு நிவாரணம் மற்றும் பக்க பலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு IMF  இன் இணக்கப்பாடொன்று அவசியம்.

நேற்று தொடக்கம் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி நாட்டில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

IMF  வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையைக் கைவிடுமாறு நாம் கோரியுள்ளோம். நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு SVATவசதி இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்கம் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவோ முன்மொழியவோ இல்லை.

எனவே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் இதனை எடுத்துக்கூறியுள்ளோம்.

நாட்டில் கணப்படும் வறுமைக்கு தீர்வாக, ஒரு நிலைபேறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. அஸ்வெசும திட்டத்தின் மூலம் நுகர்வு சார் தேவைப்பாட்டை பூர்த்தி செய்து கொள்ள ஓரளவு பக்க பலமளிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளை உள்ளடக்கிய திட்டங்கள் நாட்டில் இல்லை. நாட்டில் 50 சதவீதமான மக்கள் வறுமை நிலையை எட்டியுள்ளனர்.

இதனை நாம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

குறிப்பாக ‘பராட்டே’ சட்டம் அமுல்படுத்தப்படுவது பல சந்தர்ப்பங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களினது கடன் மறுசீரமைப்பு, கடன் மற்றும் வட்டி தள்ளுபடி போன்ற திட்டங்களை முன்னெடுக்கப்படவில்லை. இதனால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்கள் உதவியற்று காணப்படுகின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply