காலி சிறைச்சாலையில் பற்றியெரியும் தீ
இலங்கை
காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.























