சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
இலங்கை
2025 ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்தார்.
அதேநேரம், லிட்ரோ எரிவாயு நிறுவனம், அதன் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையானது 2025 ஒக்டோபர் மாதத்தில் மாறாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.























