9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மீட்பு
இலங்கை
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் ஒரு தொகை வெளிநாட்டு சகரெட்டுகள், மின்-சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 9.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (செப்.30) துபாயிலிருந்து EK 652 மற்றும் EK 654 விமானங்களில் வந்தடைந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு இலங்கை பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த பறிமுதல் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கொழும்பை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதனா நபர்களுக்கு ரூ. 750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





















