கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025
இலங்கை
கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் “கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கூடத்தில்” இடம் பெற்றது.
இதன்போது தமிழ் கலாச்சார முறைப்படி மேளதாளங்களோடு மாநகர சபை முதல்வர் வ்ராய்க் கெலி பல்தசார் அவர்கள் அழைத்து வரப்பட்டதோடு மங்கள ஆரத்தியுடன் திலகம் இட்டு வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகளிலும் கலந்து சிறப்பித்த மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை தமிழ் ஊழியர்களும் இந்த பூஜை நிகழ்வில் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொழும்பைச் சேர்ந்த தமிழ் பாடசாலைகள் மற்றும் இந்து மன்றங்களின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு அதில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு மாநகர சபை முதல்வர் பரிசில்கள் வழங்கியதோடு நவராத்திரியின் மகிமையையும் அதன் மூலம் ஏற்படும் இன சமத்துவத்தையும் பற்றியும் உரையாற்றியிருந்தார்.























