• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரூர் மாநாட்டில் ஏற்பட்ட துயரச் சம்பவம் - விஜய் வழங்கும் இழப்பீடு 

தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதனை அறிவித்துள்ளார். 

கரூர் பகுதியில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  நேற்றைய மாநாட்டின் போது சுமார் 39 பேர் வரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 

இந்தநிலையில்,  குறித்த சம்பவமானது கற்பனைக்கும் எட்டாத வகையில் நடந்துள்ளதாகவும்,  இதன்போது படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply