• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் - வீடுகள் சேதம் - 7 பேர் காயம்

சீனாவின் வடமேற்கில் உலா கான்சு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுள்ளது.

கான்சு மாகாணத்தில் லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.

மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது.

நிலநடுக்கத்தின் போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சேதங்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் அண்டை மாவட்டங்களான சாங்சியான், வெயுவான், லிண்டாவோ, டிங்ஸி, வுசான், தியான்சுயி ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

மொத்தம் 43 முறை அதிர்வுகள் பதிவிகின. இதனால் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடத்துள்ளனர். 
 

Leave a Reply