கார்மேனி செல்வம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
சினிமா
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.
நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.























