கம்பளை – உனம்புவ பிரதான வீதி புனரமைப்புப் பணிகளின் பின்னர் மக்களிடம் கையளிப்பு
இலங்கை
கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்க்குச் செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கம்பளை நகர சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பல வருட காலமாக குறித்த பிரதான வீதி சேதமடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















