கத்ரீனா கைப் கர்ப்பம்- குவியும் வாழ்த்துகள்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல், கத்ரீனா கைப். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் கத்ரீனா கைப் இணைந்து நடித்து இருந்தார்.
கத்ரீனா கைப் கர்ப்பம் அடைந்திருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இந்த தகவலுக்கு விக்கி கவுசலும், கத்ரீனா கைப்பும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கத்ரீனா கைப் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக அறிவித்தார்.
இது குறித்து விக்கி கவுசலும், கத்ரீனா கைப்பும் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் வாழ்க்கையின் சிறந்த அத்தியாயத்தை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தொடங்கும் வழியில் என்ற குறிப்புடன் விக்கி கவுசல் கத்ரீனா கைப் வயிற்றை ஆசையோடு தொட்டு பார்ப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியாகி சற்று நேரத்தில் ஏராளமானோர் கத்ரீனா கைப்புக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.






















