• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த அப்டேட்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று சிறப்பு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா தெரிவித்துள்ளார்.

இன்று (27) காலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வைத்தியர்ருக்‌ஷன் பெல்லனா, முன்னாள் ஜனாதிபதி இனி ஒரு கைதி அல்ல என்பதால், அவர் தனது தனிப்பட்ட வைத்தியரை அணுகலாம் என்றும் கூறினார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் அவரது கடுமையான நீரிழப்பு தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தேசிய வைத்தியசாலை எந்தவொரு நோயாளிக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதாகவும், சேவைகளைப் பெற வைத்தியசாலைக்கு வரும் எவரும் சமமாக நடத்தப்படுவதாகவும் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply