தீ விபத்தில் 07 வயது சிறுவன் உயிரிழப்பு! பெற்றோர் மீது சந்தேகம்
இலங்கை
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 07 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த தீ விபத்து இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்வத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இருந்த நிலையில், தீ விபத்தின் போது அவர்களுக்கு காயம் ஏற்படாததால் இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வசித்து வருவதாகவும் மேலும், அந்த தாய் வேறொரு நபருடன் திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், நேற்று (8) இரவு குறித்த பெண் வீடு திரும்பியபோது ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடரான விசாரணைகளை பலாங்கொடை பதில் நீதவான் மேற்கொள்ளவுள்ளதோடு, சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.























