சுற்றுலாப்பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்கான முயற்சியில் கனடாவும் அமெரிக்காவும்
கனடா
ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்கள் இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, சுற்றுலாத்துறை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களை மிரட்டும் ட்ரம்புக்காக அமெரிக்காவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள். அதனால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கனாடாவுடன் மோதல் என்பதால், கனடா சென்றால் தங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குமோ என, அமெரிக்கர்கள் கனடாவுக்கு சுற்றுலா வர தயங்குவதும் தெரியவந்துள்ளது.
மே மாதத்தில், கனடாவுக்கு காரில் சுற்றுலா வந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 10.7 சதவிகிதமும், விமானம் மூலம் வந்தவர்கள் எண்ணிக்கை 5.5 சதவிகிதமும் குறைந்துள்ளது.
ஆக, மீண்டும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக, இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
கனடா சுற்றுலாத்துறை அமெரிக்கர்களை வரவேற்பதைக் காட்டும் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது.






















