• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்கு இந்தி தெரியாது... குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய வீடியோ வைரல்

சினிமா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் "குபேரா". இது தனுஷின் 51-வது படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வருகிற 20-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மும்பையில் நேற்று 'குபேரா' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் இந்தியில், நடிகர் தனுஷை ஒரு சில வார்த்தைகளை பேசுமாறு அழைத்தார். அப்போது பேசத்தொடங்கிய தனுஷ், ஓம் நமச்சிவாயா... எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோஷம் உங்களை எல்லாம் பார்த்ததில். எனக்காக இங்க வந்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப நன்றி. எனக்கு இந்தி தெரியாது. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன், அதுவும் கொஞ்சம் தான் தெரியும் என்றதும் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும் பட அனுபவம் குறித்து பேசினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply