வசூலில் இந்தியன் 2-வை கூட ஓவர் டேக் செய்ய முடியாமல் தவிக்கும் தக் லைஃப்
சினிமா
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 5- ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்ச்சனத்தை பெற்று வருகிறது.
திரைப்படம் வெளியான முதல் நாளில் 23 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 36.90 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இரெண்டே நாளில் 60 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அவர் நடித்த இந்தியன்2 திரைப்படமும் இரண்டு நாளில் 44 கோடி ரூபாய் வசூலித்தது. தக் லைஃப் திரைப்படம் இன்னும் வரும் நாட்கள் தான் தக் லைஃப் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையில் இருக்கிறது.























