இராணுவத்தில் இருந்து விலகிய 10,000 பேரைப் பொலிஸ் சேவையில் இணைக்கத் திட்டம்
இலங்கை
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருவதாக
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.























