• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார்.

இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆண் பாவம் படத்தின் முதல் சிங்கிளான "ஜோடி பொருத்தம்" பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜோடி பொருத்தம் பாடல் வரும் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Leave a Reply