• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய பொசன் வாரம் இன்றுமுதல் ஆரம்பம்

இலங்கை

இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய பொசன் விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆர்.விமலசூரிய தெரிவித்தார்.

போசன் காலத்தில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஒரு விசேட கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ள இடங்கள், தானசாலைகள் (தன்சல்) நடைபெறும் இடங்கள், முதலுதவி மையங்கள் உள்ள இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த செயலியை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக கே.பி.ஆர். விமலசூரிய மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply