• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உபக்குழு

இலங்கை

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி கடன்களால் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சகக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

அதன்படி, இவ்விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்மொழிய,  நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையில் உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நுண்நிதி கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவும், பொருத்தமான திட்டங்களை முன்வைக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர்  தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply