• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்ச்சைகளை தாண்டி வெளியானது தக் லைஃப்

சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இப்படத்தில் சிம்பு நடித்துள்ளதால் அவரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்படம் தொடர்பான டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், இன்று ஒருநாள் மட்டும் 'தக் லைஃப்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைகளை தாண்டி 'தக் லைஃப்' படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதையொட்டி திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்படத்தில் நடித்த நடிகர்களும் திரையரங்கிற்கு திரைப்படத்தை காண வந்தனர்.

இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply