• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகருக்கு கையளிப்பு

இலங்கை

கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது நாடாளுமன்றத்தில் ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவொன்று நேற்று (04) சபாநாயகர் (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ன மற்றும் ருவன் மாபலகம ஆகியோர் இந்த முன்மொழிவை கையளித்தனர்.

அதற்கமைய, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பில் கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
 

Leave a Reply